Map Graph

வவுனியா தொடருந்து நிலையம்

வவுனியா தொடருந்து நிலையம் அல்லது வவுனியா புகையிரத நிலையம் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தின் நிருவாகத்தில் இயங்குகின்றது. வடக்குப் பாதையின் ஓர் அங்கமாக உள்ள இந்நிலையம் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கின்றது. பிரபலமான யாழ் தேவி சேவை இந்நிலையத்தினூடாக நடைபெறுகின்றது. ஈழப்போர் நடைபெற்ற காலத்தில் 1990 யூலை முதல் வவுனியாவில் இருந்து வடக்கே சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 2009 இல் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து வடக்குப் பாதை படிப்படியாக புனரமைக்கப்பட்டு வந்தது. தற்போது வவுனியாவூடாக கிளிநொச்சி மாவட்டம், பளை வரை சேவைகள் நடைபெறுகின்றன.

Read article
படிமம்:Vavuniya_Railway_Station_-_Sri_Lanka.jpg